நாளை 13-ம் தேதி மின் தடை...! பெ.நா.பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் நாளை செப்டம்பர் 13-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெரியநாயக்கன்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் நாளை செப்டம்பர் 13-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று கோவை வடமதுரை செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாயக்கன்பாளையம், கோவனூர், கூடலூர், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சக குடியிருப்பு, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாமநாயக்கன்பாளையம், பாலமலை, நரசிம்மநாயக்கன்பாளையம், வட்டப்பாறை மேடு, அம்பேத்கர் நகர், பிரஸ் காலனி, திருவள்ளுவர் நகர், சாந்தி மேடு, தம்பு ஸ்கூல், செல்வபுரம், பெரிய மத்தம்பாளையம், சின்ன முத்தம் பாளையம், சாந்தி மேடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இதே போல், கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட நல்லாம்பாளையம், சாய்பாபா காலனி, இடையர்பாளையம், சேரன் நகர், லெனின் நகர், சங்கனூர், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என டாட்டா பாத் செயற்பொறியாளர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...