ராணுவப்பணியில் சேரும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் தொகுப்பு மானியம் கேட்டு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்

ராணுவ பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்று வரும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வரை தொகுப்பு மானியம் வழங்கப்படுகிறது.


கோவை: ராணுவப்பணியில் சேரும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பயிற்சி காலத்தின் போது, தொகுப்பு மானியம் கேட்டு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் மற்றும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் வாரிசுகள் ராணுவத்தில் சேர்வதை ஊக்குவிக்கும் வண்ணமாக, ராணுவ பயிற்சி காலத்தில் ஏற்படும் செலவினங்களை எதிர்கொள்ளும் விதமாக தமிழக அரசால் மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை மூலமாக தொகுப்பு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

முப்படைகளில் ராணுவ பணிகளில் சேர்ந்து பயிற்சி பெறும் போது, தொகுப்பு மானியம் பெற்று பயன்பெறுமாறு தமிழக அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்திலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் மற்றும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் வாரிசுகள் முப்படைகளில் ராணுவ பணியில் சேர்ந்து பயன்பெறுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் தகவல்களுக்கு கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

முப்படைகளில் நிரந்தர படை அலுவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்று வருபவர்களுக்கு ரூ.1 லட்சமும், குறுகிய கால படை அலுவலர்களுக்கு ரூ.50,000, இளநிலை படை அலுவலர் மற்றும் இதர பதவிகளுக்கு ரூ.25,000 தொகுப்பு மானியமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...