வரும் செப் 9 மற்றும் 16 ஆம் தேதி குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெறும் - கோவை ஆட்சியர்

வரும் 9, 16 தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோவை மாவட்டத்தில் உள்ள 1697 அங்கன்வாடி மையங்கள் 572 தனியார் பள்ளிகள் 1392 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 132 தொழில்நுட்பக் கல்லூரிகள் 89 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 328 துணை சுகாதார நிலையங்களில் முகாம் நடைபெறவுள்ளது.


கோவை: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் (அல்பெண்டசோல் மாத்திரை) வழங்கும் முகாம் வரும் செப்டம்பர் 9 மற்றும் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், வரும் 9, 16 தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கோவை மாவட்டத்தில் உள்ள 1697 அங்கன்வாடி மையங்கள் 572 தனியார் பள்ளிகள் 1392 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 132 தொழில்நுட்பக் கல்லூரிகள் 89 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 328 துணை சுகாதார நிலையங்களில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடற்புழு நீக்க சிறப்பு முகாமில், 1 வயது குழந்தை முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நீங்கலாக) வருகிற 9, 16 -ந் தேதிகளில் மருந்து அளிக்கப்படும்.

இம்முகாமினை பார்வையிட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறையில் இருந்து வட்டார மருத்துவர்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில் உள்ள வட்டார திட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட அளவிலான சுகாதார அலுவலர்கள் மேற்பார்வை பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...