தீபாவளி: கோவையில் பட்டாசு கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிக பட்டாசுக் கடை வைக்க விருப்பம் உள்ளவர்கள் உரிமத்தினை பெறுவதற்கு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.



கோவை: அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் நடத்திட விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெடிபொருள் சட்ட விதிகள் 2008 இன் கீழ் கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் தற்காலிக பட்டாசு உரிமம் தமிழ்நாடு அரசு உத்தரவின்படி நடப்பு ஆண்டு முதல் ஒற்றை சாளர முறையில் பெற்று இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், இணைய வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் உரிமத்தினை பெறுவதற்கு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

1. தற்காலிகமாக பட்டாசு விற்பனை உரிமம் கோரும் புலம் 9 சதுர மீட்டர் முதல் 25 சதுர மீட்டர் வரை உள்ளடக்கியதாகவும் புலத்தினை குறிக்கும் புலவரைபடத்தில் சாலை வசதி சுற்றுப்புறத் தன்மை மற்றும் கடையில் கொள்ளளவு ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட்டு காட்டும் புலவரை படமாக இருக்க வேண்டும்(இ- சேவை மையத்தில் Scan செய்யப்படும்).

2. உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரராக இருப்பின் அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டில் வீட்டு வரி செலுத்திய ரசீது நகல்.

3. வாடகை கட்டிடம் எனில் உரிமையாளர் வீட்டு வரி செலுத்திய அசல் ரசீது நகலுடன் கட்டிட உரிமையாளரிடம் 20 ரூபாய் காண முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மத கடிதம்.

4. ஒரே தலைப்பின் கீழ் அரசு கணக்கில் உரிம கட்டணம் 700 ரூபாய் அசல் செலுத்து சீட்டு(இ- செலான் கணினி மையத்தில் கட்டி இ-சேவை மையத்தில் தர வேண்டும்).

5. மனுதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள வண்ணப் புகைப்படங்கள்(இ- சேவை மையத்தில் Scan செய்யப்படும்).

6. மனுதாரரின் அசல் நிரந்தர கணக்கு எண்(Pan card), ஆதார் கார்டு குடும்ப அட்டை.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...