கோவை வழியாக செல்லும் கொச்சுவேலி - கோர்பா செல்லும் ரயில் ரத்து...!

கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோவை வழியாக கோர்பாவுக்கு இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோவை வழியாக கோர்பாவுக்கு வாரந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை கேரளா மட்டும் அல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தென்கிழக்கு மத்திய ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட நாக்பூா் அருகே கச்சே வாணிபகுதியில் சிக்னல் பராமரிப்பு மற்றும் பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஒரு சில நாட்கள் இரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரயில் எண்: 22648, கொச்சுவேலி - கோா்பா வாராந்திர விரைவு செப்டம்பா் 1 மற்றும் 5 ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது என்றும் இரயில் எண் 22647, கோா்பா- கொச்சுச்வேலி வாராந்திர விரைவு ரயிலானது, செப்டம்பா் 3 மற்றும் 7ஆம் தேதி ரத்துத் செய்யப்படுவதாக, பாலக்காடு ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...