ஓணம் பண்டிகை: கோவையில் செப்.8 ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் உத்தரவு

ஓணம் உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக வரும் 17ஆம் தேதி முழு பணி நாளாக செயல்படும் எனவும் ஓணம் விடுமுறையின் போது, அரசு கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.



கோவை: ஓணம் பண்டிகையையொட்டி வரும் 8ஆம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கபடுவதாக, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் செப்டம்பர் 8-ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறைக்கு பதிலாக வரும் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று முழு பணி நாளாக செயல்படும். மேலும், இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881 இன் கீழ் வராது. இதன் காரணமாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கும் போது, மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...