அறிவியல் விழிப்புணர்வு திறனறிவு தேர்வு - செப்டம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

மத்திய அரசு நடத்தும் "அறிவியல் விழிப்புணர்வு திறனறி தேர்வு”-ல் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் www.vvm.org.in என்ற வலைத்தள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு, 87782 01926 என்ற எண்ணில் அல்லது [email protected] என்ற, மின்னஞ்சல் முகவரியில், தொடர்பு கொள்ளலாம்.



கோவை: மத்திய அரசு நடத்தும் அறிவியல் விழிப்புணர்வு திறனறி தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம் மற்றும் தேசிய கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வு தேர்வை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இணையவழியில் நடக்கும் இந்த தேர்வில், பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாமல், தனித்தேர்வர்களும் பங்கேற்கலாம். ஆங்கிலம் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மராத்தி ஆகிய பிராந்திய மொழிகளிலும் நடக்கும் இந்த தேர்வு வரும் நவம்பர் 27 மற்றும் 30 ஆகிய 2 நாட்களில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்வில் 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான, மாணவர்கள் பங்கேற்கலாம். மாவட்ட, மாநில, தேசிய அளவில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.

இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. www.vvm.org.in என்ற வலைத்தள பக்கம் மூலமாக இந்த தேர்வுக்காக விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவலுக்கு, வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் - 87782 01926 என்ற எண்ணில் அல்லது [email protected] என்ற, மின்னஞ்சல் முகவரியிலோ, தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...