கோவையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: நாளை பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு.

நாளை விநாயகர் ஊர்வலம் நடைபெறவுள்ளதால், நாளை காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, நகருக்குள் லாரிகள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


கோவை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்காக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பொதுமக்கள், கட்சிகள், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஏராளமான இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன.

அவ்வாறு வைத்து வழிபாடுசெய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நாளை, செப்டம்பர் 2-ம் தேதி, குளங்களில் கரைக்கப்பட உள்ளதால், இதற்காக சில இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், விநாயகர் சிலைகள், நாளை மதியம் 1:00 மணிக்கு குனியமுத்தூர் தர்மராஜா கோவிலில் இருந்து புறப்பட்டு, பாலக்காடு ரோடு வழியாக குனியமுத்தூர் குளத்திலும், 2:00 மணிக்கு போத்தனூர் சாரதா மில் ரோட்டில் துவங்கி, சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி ரோட்டில் சென்று குறிச்சி குளத்திலும், கரைக்கப்பட உள்ளன.

இதற்காக நாளை காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, நகருக்குள் லாரிகள் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலக்காடு முதல் உக்கடம் செல்லும் வாகனங்கள், காலை 11:00 மணி முதல் கோவைப்புதூர் - குளத்துப்பாளையம் - ஆசிரம் பள்ளி சந்திப்பு - புட்டுவிக்கி சாலை வழியாகவும்; உக்கடம் முதல் பொள்ளாச்சி சாலை செல்லும் வாகனங்கள், சுங்கம் -- ராமநாதபுரம் -- நஞ்சுண்டாபுரம் -- சாரதா மில் ரோடு - தக்காளி மார்க்கெட் வழியாகவும்; உக்கடம் முதல் பாலக்காடு சாலை செல்லும் வாகனங்கள் பேரூர் பைபாஸ் -சேத்துமா வாய்க்கால் செக்போஸ்ட்- வழியாக, புட்டுவிக்கி ரோடு - குளத்துப்பாளையம் வழியாகவும் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், பொள்ளாச்சி முதல் பாலக்காடு ரோடு செல்லும் வாகனங்கள், 'எல் அண்ட் டி' பைபாஸ் சாலை வழியாக, மதுக்கரை மார்க்கெட் ரோடு - பிள்ளையார்புரம் சந்திப்பு - சுகுணாபுரம் வழியாகவும்; பொள்ளாச்சி முதல் உக்கடம் செல்லும் வாகனங்கள், கற்பகம் கல்லூரி சந்திப்பு - ஈச்சனாரி - சுந்தராபுரம் -ஆத்துப்பாலம் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...