இளம் சாதனையாளர்கள் பிரதமர் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில், பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 மற்றும் +1 வகுப்புகள் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.



கோவை: இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த, 15 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு, தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

அதில், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில், பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு அல்லது பிளஸ் 1 படித்துக் கொண்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கு நாளை (27.08.2022) கடைசி நாள். விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த விரிவான விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...