வரும் 28 ஆம் தேதி கோவையில் தமிழக அரசின் சார்பில் 'வீரமங்கை வேலுநாச்சியார்' நாடகம் - பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

வரும் ஆகஸ்டு 28ஆம் தேதி ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி கலையரங்கில் மாலை 5:30 மணி அளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் குறித்த இசையார்ந்த நடன நாடகம் நடைபெற உள்ளது. பொது மக்களுக்கு அனுமதி இலவசம்.



கோவை: கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை கலைப்பண்பாட்டு துறை, இயல் இசை நாடக மன்றம் மற்றும் செய்தித்துறை இணைந்து வீரமங்கை வேலுநாச்சியார் குறித்த இசையார்ந்த நடன நாடகம் நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஆகஸ்டு 28ஆம் தேதி ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி கலையரங்கில் மாலை 5:30 மணி அளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் குறித்த இசையார்ந்த நடன நாடகம் நடைபெற உள்ளது.

கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை கலைப்பண்பாட்டு துறை, இயல் இசை நாடக மன்றம் மற்றும் செய்தித்துறை இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில் 18-ம் நூற்றாண்டை கண் முன்னே கொண்டு வரும் காவியம், மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் பொற்காலத் தோற்றம் பிரம்மாண்டமாகவும் 60 கலைஞர்கள் பங்கேற்கும் வீரமங்கை வேலு நாச்சியார் நாடகமும் அரங்கேற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையாளர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...