கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு...!

கோவை மாவட்டத்தில் நாளைய தினம் (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக சில இடங்களில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குனியமுத்தூர் மற்றும் ஒண்டிப்புதூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.


கோவை: கோவை மாவட்டத்தில் நாளைய தினம் (வியாழக்கிழமை) சில இடங்களில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக குனியமுத்தூர் செயற்பொறியாளர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மதுக்கரை துணை மின் நிலையம், காக்கா சாவடி, பாலத்துறை, பைபாஸ் ரோடு, சாவடிபுதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்ஜிஆர் நகர், சுகுணாபுரம், பிகே புதூர், மதுக்கரை, அறிவொளி நகர், மற்றும் கோவைபுதூரில் ஒரு பகுதி ஆகிய பகுதிகளிலும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், ஒண்டிப்புதூர் செயற்பொறியாளர் அருள்செல்வி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பீடம்பள்ளி துணை மின் நிலையம், கள்ளப்பாளையம், சின்ன களங்கள், பீடம்பள்ளி, பாப்பம்பட்டி, நாகம நாயக்கன்பாளையத்தில் ஒரு பகுதி, செல்வராஜபுரத்தில் ஒரு பகுதி, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் மற்றும் பள்ளபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை எற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...