இலக்கிய திறனறி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - +1 மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

வரும் அக்டோபர் 1ஆம் தேதி தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகள் மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான பயிற்சி வகுப்புகள், கோவை தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில் நடைபெறுகிறது.


கோவை: தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வை வரும் அக்டோபர் 1ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்த உள்ளது.

பிளஸ் 1 மாணவர்களுக்கான இந்த தேர்வில் வெற்றி பெற்றால், இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும், ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு, கோவை தொழில்நுட்பக் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மற்றும் கணிதவாணி கணித அறிவியல் கழகம் சார்பில், இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், பெயர், பள்ளி முகவரி, வாட்ஸ்அப் எண் ஆகியவற்றை, 63816 48584 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பான பயிற்சி வகுப்புகள் வரும், 28, 31, 04, 11, 28, 25 ஆகிய ஆறு நாட்கள் நடைபெற உள்ளதாகவும், கூடுதல் விவரங்களுக்கு, 99650 12201 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...