காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான உடற்தகுதி மற்றும் உடல் திறனறித் தேர்வு – அசல் சான்றிதழ்களுடன் தேர்விற்கு வர அறிவுறுத்தல்…!

வரும் 23 மற்றும் 24 ஆம் தேதி கோவையில் நடைபெறும் உதவி ஆய்வாளர்கள் பதவிற்கான தேர்விற்கான உடற்தகுதி மற்றும் உடல் திறனறித் தேர்வுகள் வரும் 23-24 தேதிகளில், பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.



கோவை: வரும் 23 மற்றும் 24 ஆம் தேதி கோவையில் நடைபெறும் உதவி ஆய்வாளர்கள் பதவிற்கான தேர்விற்கான அழைப்பு கடிதம் மற்றும் தேர்வாளர்கள் எடுத்து வர வேண்டிய விபரங்களை மாநகர போலீஸார் செய்திகுறிப்பாக வெளியிட்டுள்ளனர்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது, காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான உடற் தகுதித் தேர்வு மற்றும் உடல் திறனறித் தேர்வுகள் வரும் 23.08.2022 மற்றும் 24.08.2022 தேதிகளில் கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் விண்ணப்பத்தாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு அழைப்புக் கடிதம் பெறப்படாதவர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய இணைய தளத்திற்கு (https://www.tnusrb.tn.gov.in/) சென்று அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி, தகுதி தேர்வின் முதல் அணி காலை 06.30 மணிக்கும். இரண்டாம் அணி காலை 07.30 மணிக்கும், மூன்றாம் அணி (காவல் துறை ஒதுக்கீடு) காலை தேர்வாணைய 08.30 அழைப்பு மணிக்கும் நடைபெற உள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்கு விண்ணப்பம் அளிக்கும் பொழுது தகவல் ஏற்றம் செய்த சான்றிதழ்களின் அனைத்து அசல் சான்றிதழ்களையும், கல்விச்சான்று, ஜாதிச்சான்று விளையாட்டு ஒதுக்கீட்டிற்கான சான்று, தமிழ்வழி கற்றலுக்கான சான்று, படையிலிருந்து விடுவிக்கப்பட்ட சான்று (முன்னாள் இராணுவத்தினர்). தடையில்லாச்சான்று (காவலர்) என அனைத்து அசல் சான்றிதழ்களையும் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...