கோவை மாநகரில் ஊர்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு - 20-45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

காவல்துறையுடன் இணைந்து பணிபுரிய ஆர்வம் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் கோவை காந்திபுரம் C-1 காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.


கோவை: கோவை மாநகரில் ஊர் காவல் படைக்கு ஆள் சேர்ப்பது தொடர்பாக மாநகர காவல்துறை சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகர ஊர்க்காவல் படையில் சேர்ந்து காவல்துறையுடன் இணைந்து பணிபுரிய ஆர்வம் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் கோவை காந்திபுரம் C-1 காட்டூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி என்றும், வயது வரம்பாக 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் மாநகர காவல் எல்லை பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்றும், சேவை செய்யும் மனப்பான்மை கொண்டவராகவும், உடல் தகுதி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

மேலும், மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகளில் பணிபுரிபவர்களும் சுயதொழில் செய்பவர்களும் சேரலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்களின் நகல்கள் :

1. 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

2. மாற்றுச் சான்றிதழ்

3. முகவரி சான்றிதழ்

4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...