தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் உறுதிமொழி படிவம் (Indemnity Bond) வாங்கக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை

கோவையில் உள்ள தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் உறுதிமொழி படிவம் (Indemnity Bond) பெறுவதாக குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள பள்ளிகல்வித்துறை, பள்ளி நேரத்தில் வளாகத்திற்குள் இருக்கும் மாணவர்களுக்கு என்ன நிகழ்ந்தாலும் பள்ளி நிர்வாகமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.


கோவை: சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பொதுமக்கள் சிலர் சம்பந்தப்பட்ட பள்ளி மீது தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகளில், மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி வளாகத்திற்குள் குழந்தைகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்காது என்ற உறுதிமொழி படிவம் (indemnity bond) பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இப்படிவம், சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டதை தொடர்ந்து, கல்வித்துறை சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், பள்ளி நேரத்தில், வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் பூபதியிடம் கேட்டபோது, கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பின், சில தனியார் பள்ளிகள், உறுதிமொழி பத்திரத்தில், பெற்றோரிடம் கையெழுத்து பெறுவதாக புகார் எழுந்தது. ஆனால், இது இதுவரை பெற்றோர் தரப்பில் இருந்து எந்த புகாரும் பதிவாகவில்லை, என்றார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...