கோவை: சுதந்திர தினத்தன்று மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வரும் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவு. விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள், தனி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.


கோவை: சுதந்திர தினத்தன்று மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் வரும் ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக்கூடங்கள் வரும் 15ஆம் தேதி திறக்க கூடாது என குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதேபோல், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுபானக் கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல் நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்டவை அன்று ஒருநாள் மட்டும் செயல்பட கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...