சுற்றுலா துறை சார்பில் கோவை - திருப்பதிக்கு சிறப்பு பேருந்து - கோவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

இந்த பயணத்தில், ரூபாய் 4000 கட்டணத்தில் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் திரும்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. பயணிகளுக்கு உணவும், திருப்பதியில் அறைகள் (for refresh) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில், கோவையில் இருந்து திருப்பதிக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இன்று பேருந்தின் முதல் பேருந்தை மாவட்ட ஆட்சியர் காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



அப்போது, அவர் பயணிகளுக்கு இரவு உணவு வழங்கினார்.



பயணிகள் ஆட்சியருடன் மிகிழ்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

கட்டணம் மற்றும் சேவை

இந்த பயணத்தில், ரூபாய் 4000 கட்டணத்தில் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் திரும்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. பயணிகளுக்கு உணவும், திருப்பதியில் அறைகள் (for refresh) வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வழிகாட்டி ஒருவர் (guide) உடனிருப்பார் எனவும் அவர் திருப்பதி வெங்கடாசலபதி தரிசனம், அலமேலு மங்கை தரிசனத்திற்கு அழைத்து செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புக்கிங் செய்வது எப்படி..?



இந்த பயணத்தை மேற்கொள்ள விரும்பும் பொதுமக்கள், www.ttdconline.com என்ற தளத்தில் புக்கிங் செய்து கொள்ளலாம் அல்லது காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். முதற்கட்டமாக, சீட்டிங் (non-sleeping) பேருந்து மட்டுமே இயங்கும்.

அரசு சார்பில் கோவையில் இருந்து திருப்பதிக்கு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...