ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக கேரளாவுக்கு 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

வரும் ஆகஸ்டு 30 ஆம் தேதி முதல் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக செப்டம்பர் 1 முதல், 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


கோவை: வரும் ஆகஸ்டு 30 ஆம் தேதி முதல் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி கொண்டாப்படவுள்ள ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவுக்கு செல்ல கோவை வழியாக 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

ஓணம் பண்டிகையையொட்டி, செப்டம்பா் 1-ந் தேதி கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து 06046 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில், இரவு 10 மணிக்குப் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது மறுநாள் மதியம் 12 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பா் 2-ந் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 06045 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில், மாலை 3.10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 3 மணிக்கு எா்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், செப்டம்பா் 2-ந் தேதி தாம்பரத்தில் இருந்து 06041 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில், பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.45 மணிக்கு மங்களூர் ரெயில் நிலையத்தை அடையும்.

செப்டம்பா் 3-ந் தேதி மங்களூருவில் இருந்து காலை 10 மணிக்குப் புறப்படும் 06042 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் மறுநாள் காலை 4 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த ரயிலானது சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, ஒட்டப்பாலம், சொரனூா், குட்டிபுரம், திரூா், கோழிக்கோடு, வடகரை, தலச்சேரி, காசா்கோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செப்டம்பா் 4-ந் தேதி தாம்பரத்தில் இருந்து 06043 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பகல் 12 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பா் 5-ந் தேதி கொச்சுவேலியில் இருந்து 06044 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில், பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும் என்றும், இந்த ரயிலானது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, ஒட்டப்பாலம், திருச்சூா், ஆலுவா, கொல்லம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பா் 11-ந் தேதி நாகா்கோவிலில் இருந்து 06048 என்ற எண் கொண்ட சிறப்பு மாலை 5.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலானது, திருவனந்தபுரம், கொல்லம், காயன்குளம், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோல், செப்டம்பா் 11-ந் தேதி கொச்சுவேலியில் இருந்து 06037 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.10 மணிக்கு கா்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தை சென்றடையும்.

செப்டம்பா் 12-ந் தேதி பையப்பனஹள்ளியில் இருந்து 06038 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் மாலை 3 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.35 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தை சென்றடையும் என்றும், இந்த ரயில் கொல்லம், காயன்குளம், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...