திருப்பதிக்கு தினசரி மதுரை, கோவையிலிருந்து சுற்றுலா பயணம்

மதுரை, கோவையிலிருந்து திருப்பதிக்கு தினசரி சுற்றுலா பயணம் வரும் 8-ந்தேதி முதல் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து உள்ளது.



கோவை: சென்னையை தொடர்ந்து, திருச்சி, சேலம், மதுரை, கோவை மாநகரங்களில் இருந்து, தினசரி திருப்பதி சுற்றுலாவை, தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம், வரும் 8-ந்தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளது. சென்னையில் இருந்து தினசரி திருப்பதி சுற்றுலாவை, மிகச் சிறந்த முறையில், சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செயல்படுத்தி வருகிறது.

இதை மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருச்சி, மதுரை, சேலம், கோவை போன்ற இடங்களில் இருந்து, தினசரி திருப்பதி சுற்றுலா, வரும் 8ம-ந் தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளது.

இதில் பயணிக்கும் அனைவருக்கும், இரு வேளை சைவ உணவு, குளிர்சாதன பஸ் வசதி மற்றும் சிறப்பு தரிசன பயணச்சீட்டு வழங்கப்படும். இதற்கு கட்டணமாக, திருச்சி மற்றும் சேலத்தில், பெரியோருக்கு தலா 3,300; சிறுவர்களுக்கு 3,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் கோவையில் இருந்து செல்ல, பெரியவர்களுக்கு 4,000 மும், சிறுவர்களுக்கு 3,700 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நான்கு வயதில் இருந்து, பத்து வயதுக்கு உட்பட்டோருக்கு, சிறுவர் கட்டணம் வசூலிக்கப்படும்.

சுற்றுலா பயணியர் மற்றும் பொது மக்கள், இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சுற்றுலாவில் பயணம் செய்ய, ஏழு நாட்களுக்கு முன்னரே, முன் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கும், முன்பதிவுக்கும் www.ttdconline.com என்ற இணையதளத்தை பார்க்கலாம் என, சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்துாரி தெரிவித்து உள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...