இரண்டாம் நிலை காவலர் பணியிடம்: முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்..!

இதற்கான விண்ணப்பத்தை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் வழியாக விண்ணப்பித்த பிறகு அவர்களது பெயரை கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



கோவை: இரண்டாம் நிலை காவலர் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு ஆட் தேர்வு நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கு ஆட் தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், மாநிலம் முழுவதும் 3552 பணியிடங்கள் இதற்காக நிரப்பப்படும் உள்ளதாகவும், இவற்றில் 5% சிறப்பு ஒதுக்கீடு முன்னாள் படை வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கல்வித் தகுதிகளாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு 01.07.2022 அன்று 47 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். (01.07.1975- 01.07.2004 க்குள் பிறந்திருக்க வேண்டும்), ராணுவ பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் நிறைவு செய்யாதவர்கள் மற்றும் விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்கு பின்னர் ஓராண்டுக் காலத்திற்குள் ஓய்வு பெற உள்ளவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பத்தை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணையதளம் வழியாக விண்ணப்பித்த பிறகு அவர்களது பெயரை கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விவரங்களை பெறுவதற்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...