OLX செயலி மூலம் பொய்யான செய்தி பரப்பி பண மோசடியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

OLX செயலி மூலம் குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை தொடரப்பட்டு, பொய்யான செய்திகளை பரப்பி பண மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரித்துள்ளார்.


கோவை‌: OLX செயலி மூலம் குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை தொடரப்பட்டு, பொய்யான செய்திகளை பரப்பி பண மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் OLX செயலி மூலம் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும், சேலம், அம்மாபேட்டை, ஓமலூர், மேட்டூர், அந்தியூர், பவானி, கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, திருப்பூர், எட்டிமடை, காரமடை, நாமக்கல் சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், தர்மபுரி கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் கூட்டுறவு வங்கிகளில் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், மேற்படி காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும், அதற்காக நேர்காணல் நடைபெறுவதாகவும், பணியின் பொருட்டு டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என தெரிவித்து அச்செயலி மூலம் விளம்பரப்படுத்தி 8220433363 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ள தெரிவித்துள்ள செய்தி முற்றிலும் பொய்யான செய்தி என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

OLX செயலி மூலம் பரப்பப்பட்டுள்ள பொய்யான தகவல்களை கொண்டு எவரும் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை காலியாக உள்ளது என்று நம்பி எவரிடமும் பணத்தையோ அல்லது உடைமைகளையோ கொடுத்து ஏமாந்து விட வேண்டாம் எனவும் கூட்டுறவு நிறுவனங்களில் காலிப்பணியிடங்கள் ஏதேனும் நிரப்பிட தற்பொழுது கூட்டுறவு துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும் மேற்படி பரப்பப்பட்டுள்ள பொய்யான தகவல்களை நம்பி பொதுமக்கள் யாரும் எவரிடமேனும் பணம் பொருள் உடைமைகளை கொடுத்தால் ஏமாற்றப்படுவீர்கள் என்றும்.

மேலும் இது போன்ற குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் அவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் எனவும்,பொய்யான செய்திகளை பரப்பி பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...