இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு, தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



கோவை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு, தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Junior Operator (Aviation) Grade-1 பணியிடத்திற்கு முன்னால் படை வீரர்களுக்கு 7 காலி பணியிடங்கள் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு கல்வித் தகுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி சான்று மற்றும் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கும், விருப்பமும் தகுதியும் உள்ள முன்னாள் படை வீரர்கள் நாளைக்குள்(29.07.2022) www.ioci.com/PeopleCarees/job.aspx என்று இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...