விளாங்குறிச்சி, காளப்பட்டி துணை மின் நிலையங்களின் பராமரிப்பால் நாளை மின்தடை..!

விளாங்குறிச்சி, காளப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (ஜூலை 28) நடக்கவுள்ளதால் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: நாளை (ஜூலை 28) விளாங்குறிச்சி, காளப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒண்டிப்புதூர் மின்வாரிய செயற்பொறியாளர் அருள்மொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், விளாங்குறிச்சி மற்றும் காளப்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காளப்பட்டி, வீரியம்பாளையம் சேரன்மாநகர், நேரு நகர், சிட்ரா, வள்ளியம்பாளையம், பாலாஜி நகர், கே.ஆர்.பாளையம், ஜீவா நகர், விளாங்குறிச்சி, தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர்,மகேஸ்வரி நகர், குமுதம் நகர், செங்காளியப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.

மேலே குறிப்பிட்ட பகுதிகளில், நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...