MBBS/BDS படிப்பு 2022-2023 ஆண்டின்‌ மாணவர்‌ சேர்க்கை: வாரிசுகளுக்கான ஒதுக்கீட்டில் பதிவு செய்ய ESI அறிவுறுத்தல்..!

இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரிகளில், இ.எஸ்.ஐ., காப்பீடு செய்தவர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்காக காப்பீட்டு நபர் வாரிசு சான்றிதழை பெற, இ.எஸ்.ஐ.சி., இணையதளமான, www.esic.nic.in வாயிலாக விண்ணப்பிக்கலாம்.



கோவை: எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில், இ.எஸ்.ஐ., காப்பீடு தாரரின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை பெற பதிவு செய்ய, இ.எஸ்.ஐ., கழகம் அறிவுறுத்தியுள்ளது.

MBBS/BDS படிப்பு , 2022-2023 ஆண்டின்‌ மாணவர்‌ சேர்க்கை - காப்பீட்டு நபரின்‌ வாரிசுகளுக்கான இட ஒதுக்கீடு, பிரதம மந்திரி ஷ்ரம்‌ யோகி மான்‌ - தன்‌ யோஜனா மற்றும்‌ இ.எஸ்‌.ஐ மருந்தகங்களில்‌ பதிவு செய்தல்‌ தொடர்பாக இ.எஸ்.ஐ., கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

இ.எஸ்‌.ஐ திட்டம்‌ 1952 ஆம்‌ ஆண்டு பிப்ரவரி மாதம்‌ 14 ஆம்‌ தேதி தொடங்கப்பட்டு சமூக பாதுகாப்பு வழங்குவதில்‌ 70 ஆண்டுகால அர்ப்பணிப்பு சேவையை நிறைவு செய்துள்ளது. இ.எஸ்‌.ஐ திட்டத்தின்‌ கீழ்‌ மருத்துவ கல்லூரிகள்‌ நாட்டின்‌ பல்வேறு இடங்களில்‌ செயல்பட்டு வருகிறது.

1) MBBS/BDS படிப்பு, 2022-2023 ஆண்டின்‌ மாணவர்‌ சேர்க்கை - காப்பிட்டு நபரின்‌ வாரிசுகளுக்கான இட ஒதுக்கீடு:

இந்த மருத்துவ கல்லூரிகளில்‌, இ.எஸ்‌.ஐ காப்பீடு செய்யப்பட்ட நபர்களின்‌ குழந்தைகள்‌ காப்பீட்டு நபர்‌ இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ MBBS/BDS இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்‌. இந்தியா முழுவதும்‌ (சென்னை மற்றும்‌ கோயம்புத்தூர்‌ உட்பட) 437 MBBS மற்றும்‌ 28 BDS இடங்கள்‌ இ.எஸ்‌.ஐ காப்பீட்டு நபர்களின்‌ குழந்தைகளுக்காக இ.எஸ்‌.ஐ.சி ஆல்‌ நடத்தப்படும்‌ கல்லூரிகள்‌ / இ.எஸ்‌.ஐ.சி சார்பாக உள்ள கல்லூரிகளில்‌ ஒதுக்கப்பட்டுள்ளது.

இஎஸ்‌ஐ திட்டத்தின்‌ கீழ்‌ காப்பீடு பெற்ற நபர்கள்‌ இந்திய அரசு / இ.எஸ்‌.ஐ கார்ப்பரேஷன்‌ சேர்க்கை கொள்கை மற்றும்‌ நடைமுறையின்‌ படி, நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்து, தேசிய தகுதி மற்றும்‌ நுழைவுத்‌ தேர்வு- 2022 [NEET - 2022] - இல்‌ தகுதி பெற்று “காப்பீட்டு நபர்கள்‌ இட ஒதுக்கீட்டின்‌” கீழ்‌ உள்ள இ.எஸ்‌.ஐ.சி மருத்துவ / பல்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ சில‌ அரசு மருத்துவ கல்லூரிகளில்‌ இளங்கலை (எம்‌.பி.பி.எஸ்‌. / பி.டி.எஸ்‌ 2022-23) சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்‌.

NEET தரவரிசை பட்டியல்‌ மற்றும்‌ இ.எஸ்‌.ஐ.சி வழங்கும்‌ தகுதி சான்றிதழின்‌ (காப்பீட்டு நபர்‌ வாரிசு சான்றிதழ்‌) அடிப்படையில்‌ மாணவர்களின்‌ சேர்க்கை அமையும்‌. விண்ணப்பதாரர்கள்‌ காப்பீட்டு நபர்‌ வாரிசு சான்றிதழை பெற இ.எஸ்‌.ஐ.சி இணையதளத்தில்‌ (www.esic.nic.in) கொடுக்கப்படும்‌ இணைப்பின்‌ மூலமாக விண்ணப்பிக்கலாம்‌.

*“காப்பீட்டு நபர்‌ வாரிசு சான்றிதழ்‌” பெற ஆன்லைனில்‌ விண்ணப்பிப்பதற்கான இணைப்பு தொடங்கப்பட்டது. இது 26.07.2022 (23.59 மணி) வரை செயல்படும்‌.

*சம்பந்தப்பட்ட இ.எஸ்‌.ஐ.சி கிளை அலுவலகத்திற்கு விண்ணப்பத்தின்‌ நகலை நேரில்‌ சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: - 27.07.2022 5.45 PM.

மேலும்‌ விபரங்களுக்கு இ.எஸ்‌.ஐ.சி இணையதளம்‌ (www.esic.nic.in) மற்றும்‌ DGHS இணையதளம்‌ (www.mcc.nic.in) அல்லது தங்களது இ.எஸ்‌.ஐ.சி.ன்‌ கிளை அலுவலகத்தை அணுகவும்‌.

॥) பிரதம மந்திரி ஷ்ரம்‌ யோகி மான்‌ - தன்‌ யோஜனா:-

பிரதம மந்திரி ஷ்ரம்‌ யோகி மான்‌ - தன்‌ யோஜனா, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வு ஊதிய திட்டமாகும்‌. இத்திட்டத்தின்‌ கீழ்‌ காப்பீட்டாளர்‌ தனது 60 வயது நிறைவு பெற்ற பின்‌ மாதாந்திர ஓய்வு ஊதியமாக Rs. 3000 ஐ பெற்றுக்கொள்ளலாம்‌. காப்பீட்டாளர்‌ இறக்கும்‌ பட்சத்தில்‌ அவரது கணவர்‌ மனைவி ஓய்வு ஊதியத்தில்‌ 5௦ சதவீதத்தை குடும்ப ஓய்வூதியமாக மாதம்தோறும்‌ பெற்றுக்கொள்ளலாம்‌.

தகுதி நிபந்தனைகள்‌

*அமைப்பு சாரா தொழிலாளர்கள்‌.

*வயது 18 முதல்‌ 40 வரை உள்ளவர்கள்‌.

*மாத வருமானம்‌ ரூ.15000/-க்கு கீழ்‌ உள்ளவர்கள்‌.

*ESI/EPF/NPS சந்தாதாரர்‌ அல்லாதவர்கள்‌.

*வருமான வரி செலுத்த தகுதியற்றவர்கள்‌.

தகுதியான சந்தாதாரர்கள்‌ சுய சான்றளிக்கப்பட்ட ஆதார்‌ எண்‌ மற்றும்‌ வங்கி கணக்கு/ஜன்‌ தன்‌ கணக்கு எண்‌ மூலம்‌ தங்களுக்கு அருகில்‌ உள்ள பொது சேவை மையத்தை (Common Services Centers (CSC eGovernance Services India Limited (CSC SPV)) தொடர்பு கொண்டு இத்திட்டத்தின்கீழ்‌ இணைந்து கொள்ளலாம்‌.

அனைத்து பொது சேவை மையங்களின் பட்டியலை https://labour.gov.in/pm-sym (CSC Locator) என்ற இணையதள முகவரியில்‌ அறிந்துகொள்ளலாம்‌.

இத்திட்டத்தில்‌ இணைய தேவையான ஆவணங்கள்‌:

*சுய சான்றளிக்கப்பட்ட வங்கி கணக்கு அட்டையின்‌ நகல்‌ (IFSC எண்ணுடன்‌)

*சுய சான்றளிக்கப்பட்ட ஆதார்‌ அட்டை நகல்‌.

*மொபைல்‌ எண்‌.

*முதல்‌ மாத பங்களிப்பு தொகை.

॥)இ.எஸ்‌.ஐ காப்பீட்டாளர்களை பதிவு செய்தல்‌:-

அனைத்து தொழிலாளர்களும்‌ இ.எஸ்‌.ஐ.சி e-Pechan அட்டையை தங்கள்‌ நிறுவன தொழிலதிபர்களிடம்‌ இருந்து பெற்று, தங்களது இ.எஸ்‌.ஐ மருந்தகங்களில்‌ தங்களை தங்களது குடும்ப உறுபினர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. தொழிலகம்‌ / தொழில்‌ மாற்றம்‌ ஏற்படுகையிலும்‌ இதர பயன்கள்‌ தொடர்ந்து பெற கைவசம்‌ உள்ள இ.ஸ்‌.ஐ இன்சூரன்ஸ்‌ எண்ணை தொடர்ந்து உபயோகிக்கவும்‌.

இது தொடர்பாக, கோயை இ.எஸ்‌.ஐ.சி சார்மண்டல அலுவலகத்தின்‌ துணை இயக்குனர்‌ (பொறுப்பு) கே. ரகுராமன்‌ அவர்‌ கூறுகையில்‌ "தொழிலாளர்கள்‌ மற்றும்‌ தொழிலதிபர்களின்‌ நலனில்‌ அக்கறை கொண்டு திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌ மருத்துவ சேவை மற்றும்‌ பிற சேவைகளின்‌ தரத்தை இ.எஸ்‌.ஐ தொடர்ந்து மேம்படுத்த வருகிறது” என்று கூறினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...