கோவையில் உள்ள சாலையோர வியாபாரிகள் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம் - மாநகராட்சி ஆணையாளர்‌

வங்கிக்கடன்‌ திட்டத்தின்‌ மூலம்‌ ரூ.10,000/- கடன்‌ பெற்று முறையாக திருப்பி செலுத்தி முடித்தவர்கள்‌ ரூ.20,000/- கடனுதவி வங்கிகள்‌ மூலம்‌ வழங்க ஏற்பாடு செய்யப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் திட்டத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம், என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் தொழில் மேம்பாட்டிற்காக வங்கிக்கடன் வழங்கும் திட்டம், மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது, மாநகராட்சி பகுதிகளில் உள்ள தினசரி மார்க்கெட், வாரச்சந்தை, பூங்கா, இரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில் சுற்றுப்பகுதி மற்றும் கடை வீதி பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாபாரிகளுக்கென பிரத்யேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதில், முதற்கட்டமாக வங்கிகள் மூலம் மாதத்தவணை ரூ.946 வீதம் 12 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், ரூ.10,000/- கடனுதவி வழங்கப்படுகிறது. 

எனவே, தகுதியுள்ள நபர்கள் தங்களது ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இதற்கென சிறப்பு முகாம்கள் வார நாட்களான -- திங்கள் முதல் சனிக்கிழமை வரை வருகின்ற 16.07.2022 முதல் 31.08.2022 வரை நடைபெறுகிறது. 

அதே போல, ஏற்கனவே ரூ.10,000/- கடன் பெற்று முறையாக திருப்பி செலுத்தி முடித்தவர்களுக்கு, கூடுதலாக ரூ.20,000/- கடனுதவி வங்கிகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படும், என்று மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். 

இத்திட்டத்தின், மூலம் இது வரை 9,550 சாலையோர வியாபாரிகள் பயன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...