ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று புதுப்பிக்கும் சிறப்பு முகாம் சேரன் மாநகரில் நாளை நடைபெறும்..!

சேரன் மாநகர் பகுதியில் உள்ள தபால் அலுவலகம் சார்பில் ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று புதுப்பிக்கும் சிறப்பு முகாம் நாளை சேரன் மாநகர், 4 வது பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஜெயா மெடிக்கல் ஷாப் முன்பு நடைபெறும்.


கோவை: அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் ஆண்டுதோறும் ஓய்வூதியம் தொடர்ந்து பெறுவதற்கு வாழ்நாள் சான்று சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு அந்த சான்றுகளை பெற, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூல வளாகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

இந்த நிலையில், விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ள சேரன் மாநகர் பகுதியில் தபால் அலுவலகம் சார்பில் ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று புதுப்பிக்கும் பணி மேற்கொள்ள சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.

சேரன் மாநகர் நான்காவது பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஜெயா மெடிக்கல் ஷாப் முன்பு இந்த சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஓய்வூதியர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...