கோவை தேசிய சுகாதார குழுமத்தில் Data Entry Operator காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இதுகுறித்த விண்ணப்பப்படிவம் மற்றும் விரிவான விவரங்களைக் கோவை மாவட்ட இணையதளம் முகவரி http://coimbatore.nic.in ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை தேசிய சுகாதார குழுமத்தில் Data Entry Operator காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தேசிய சுகாதார குழுமத்தில் Data Entry Operator காலிப் பணியிடங்களை முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், கோவை மாவட்டத்தில் தேசிய சுகாதாரக் குழுமத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலம் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் மற்றும் இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் Data Entry Operator காலி பணியிடங்களை முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் இது குறித்த விண்ணப்பப்படிவம் மற்றும் விரிவான விவரங்களைக் கோவை மாவட்ட இணையதளம் முகவரி http://coimbatore.nic.in ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ஜூலை 25 ஆம் தேதி மாலை 5-மணிக்குள் பந்தய சாலையில் உள்ள துணை இயக்குநர் சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம் எனவும் இப்பணிகளுக்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10-மணிக்கு துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...