ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் 1-முதல் 10-வகுப்பு வரையில் சேர்க்க முடிவு..!

இதற்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணாக்கர்களும் ஆதார் எண், அலைபேசி எண் ஆகியவற்றுடன் புதிய வங்கி கணக்கு துவங்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சத்துக்கு கீழே இருக்க வேண்டும்.


கோவை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி உதவி தொகை திட்டத்தில் 1-முதல் 10-வகுப்பு வரையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக வழங்கப்பட்டு வரும் ப்ரிமெட்ரிக்(9-10 வகுப்பு) கல்வி உதவித்தொகை திட்டத்துடன் சுகாதாரமற்ற (செருப்பு தைத்தல், தோல் தொழிற்சாலை, துப்புரவு பணி, போன்றவை) தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான (1-10 வகுப்பு) கல்வி உதவி தொகை திட்டமானது இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த ப்ரிமெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டமாக வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், இதற்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணாக்கர்களும் ஆதார் எண், அலைபேசி எண் ஆகியவற்றுடன் புதிய வங்கி கணக்கு துவக்கி அதனை செயல்பாட்டில் உள்ளதை கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சத்துக்குக் கீழ் உள்ள மாணாக்கர்கள் தங்களது விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள கல்வி உதவி தொகை உதவி மையத்தை அணுகி இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்களது மாணாக்கர்களின் விவரங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் கட்டாயமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுயநிதி கல்வி நிறுவனங்களில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் சேர்க்கையின் போது எவ்வித கல்வி கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது எனவும், அவ்வாறு எங்கேனும் வசூலித்தால் மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலருக்கோ புகாரை நேரடியாகவோ அல்லது 0422-2302589 என்ற தொலைபேசி வாயிலாகவோ புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...