கோவையில் தமிழ்நாடு முதலமைச்சரின்‌ 'நமக்கு நாமே' திட்டங்களை செயல்படுத்த ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு..!

தமிழ்நாடு முதலமைச்சரின்‌ “நமக்கு நாமே” திட்டங்களைச் செயல்படுத்த ஆர்வமுள்ள பொதுமக்கள்‌, நல்வாழ்வு சங்கங்கள்‌, சமூக ஆர்வலர்கள்‌, தனியார்‌ தொண்டு நிறுவனங்கள்‌ ஆகியோர்‌ மண்டல அலுவலர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்துள்ளார்‌.


கோவை: தமிழ்நாடு முதலமைச்சரின்‌ “நமக்கு நாமே” திட்டங்களை செயல்படுத்த ஆர்வமுள்ளவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரின்‌ “நமக்கு நாமே” திட்டத்தின்‌ மூலமாக பள்ளிக்‌ கூடங்கள்‌ மேம்படுத்துதல்‌, பொது சுகாதார மையம்‌ அமைத்தல்‌, கற்றல்‌ மையங்கள்‌ அமைத்தல்‌, சாலைகள்‌, தெருவிளக்குகள்‌ அமைத்தல்‌, நீர்‌ நிலைகள்‌ புனரமைத்தல்‌, பூங்காக்கள்‌ அமைத்தல்‌, பொழுதுபோக்கு மற்றும்‌ விளையாட்டு வசதிகள்‌ ஏற்படுத்துதல்‌, மரம்‌ நடுதல்‌ போன்ற திட்டங்களைக் கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ செயல்படுத்திட மதிப்பீட்டுத் தொகையில்‌ பொதுமக்களின்‌ பங்களிப்பாக மூன்றில்‌ ஒரு பங்கு தொகை (33%) காசோலையாக வழங்கினால்‌ மீதமுள்ள மூன்றில்‌ இரண்டு பங்கு தொகை (67%) மாநில அரசால்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநகராட்சியால்‌ பணி மேற்கொள்ளப்படும்‌.

எனவே, மேற்கண்ட திட்டங்களைச் செயல்படுத்த ஆர்வமுள்ள பொதுமக்கள்‌, நல்வாழ்வு சங்கங்கள்‌, சமூக ஆர்வலர்கள்‌, தனியார்‌ தொண்டு நிறுவனங்கள்‌ ஆகியோர்‌ கீழ்க்கண்ட மண்டல அலுவலர்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்‌.

வ.எண்‌ - அலுவலர்‌ பெயர்‌ மற்றும்‌ பதவி - மண்டலம்‌ - அலைபேசி எண்‌

1. மகேஸ்கனகராஜ், நிர்வாக அலுவலர்‌ ஸ்மார்ட்‌ சிட்டி, பிரதான அலுவலகம்,‌ 98940-99024

2. கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர்‌, தெற்கு, 94437-99219

3. சுந்தர்ராஜன்‌, உதவி செயற்பொறியாளர்‌, கிழக்கு, 94421-04110

4. புவனேஸ்வரி, உதவி செயற்பொறியாளர்‌, மத்தியம்‌, 94421-04100

5. ஹேமலதா, உதவி செயற்பொறியாளர்‌, மேற்கு, 94421-04114

6. செந்தில்பாஸ்கா், உதவி செயற்பொறியாளர்‌,‌ வடக்கு, 94437-99215

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...