வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்..!

இதற்கு விண்ணப்பிக்க தகுதிகளாக 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45-வயதிற்கு மிகாமலும் மற்றவர்கள் 40-வயதிற்கு மிகவும் இருக்க வேண்டும்.



கோவை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பு கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதம் தோறும் தமிழக அரசியல் வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையைப் பெறுவதற்கு http://tnvelaivaaipu.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தகுதி உடையவர்கள் விண்ணப்பத்தில் வருவாய் ஆய்வாளரிடம் ஒப்பம் பெற்று தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கி பாஸ் புத்தகம், குடும்ப அட்டை ஆதார் அட்டை வேலைவாய்ப்பு பதிவு அட்டை மற்றும் சான்றிதழ் நகலுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளித்து உதவித்தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க தகுதிகளாக 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி அன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும் மற்றவர்கள் 40 வயதிற்கு மிகவும் இருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவு தாரர்களுக்கு வருமான உச்சவரம்பு இல்லை.

மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரி படிப்பைத் தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலுமாக வேலை இல்லாதவராக இருக்க வேண்டும் கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ மாணவியராக இருக்கக் கூடாது. ஆனால் தொலைதூரக் கல்வி மற்றும் அஞ்சல் வழி கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...