ஆசிரியர் தகுதித் தேர்வு வருகிற ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடைபெறும்.

கணினி அடிப்படையிலான இந்த தேர்வுக்கான அட்டவணைகள் மற்றும் அனுமதி அட்டைகள் தொடர்பான விவரங்கள் ஆகஸ்டு 2-வது வாரத்தில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வழங்கப்படும்.



கோவை: ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கணினி அடிப்படையில் இந்த தேர்வுகள் நடைபெறும்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள குறிப்பில்:

இந்த தேர்வுக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கணினி அடிப்படையிலான தேர்வுக்கான பயிற்சி, தேர்வில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு தேதிக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே அதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

மேலும், தேர்வு அட்டவணைகள் மற்றும் அனுமதி அட்டைகள் தொடர்பான விவரங்கள் ஆகஸ்டு 2-வது வாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வழங்கப்படும்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் பணிகளுக்கு மறுநியமன தேர்வான போட்டித் தேர்வை வருகிற டிசம்பர் மாதம் நடத்த உள்ளது. 1874 பட்டதாரி ஆசிரியர்கள், 3987 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு, 4 லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தேர்வுக்கான அட்டவணை பின்னர் வெளியிடப்படும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...