திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பேருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை, பொள்ளாச்சி வால்பாறை, உடுமலை உள்ளிட்ட பகுதிகளில், சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வந்த நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால், கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.

அதன்படி, அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

வரும் நட்டகளில், மழை அதிகரிக்கக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கு அருவிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல, கோவை குற்றாலம் மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...