கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இந்த விருதுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், http://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஜூலை 10-ம் தேதி மாலை 5-மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



கோவை: மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விட்டுள்ள செய்தி அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2022-ம் ஆண்டுக்கான விருது மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மருத்துவர், அதிக அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு அளித்த தனியார் நிறுவனங்கள், சமூகப் பணியாளர் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி போன்ற தலைப்புகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், http://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஜூலை 10-ம் தேதி மாலை 5-மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், கோவை மாவட்டத்தில் இருந்து மேற்படி விருதுகளுக்கு இணைய வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்து அதன் நகல்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் படியும் அல்லது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று ஜூலை 9-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் படியும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...