கனமழை எதிரொலி: நாளை வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் மிக கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டுமென, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


கோவை: தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், நாளை வால்பாறையில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் மிக கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டுமென, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...