கோவையில் ஆத்துப்பாலம் மின்மயானம் சீரமைக்கும் பணி: வரும் 11 ஆம் தேதி வரையில் மின்மயானம் மூடப்படும் - துணை ஆணையாளர் அறிவிப்பு!

கோவையில் வார்டு எண் 86க்கு உட்பட்ட பகுதியில் பழுதாகி உள்ள ஆத்துப்பாலம் மின்மயானம் புகைபோக்கி கோபுரத்தை சீரமைக்கும் பணி நடக்க இருப்பதால் வரும் 11 ஆம் தேதி வரையில் மின்மயானம் தற்காலிகமாக மூடப்படுவதாக துணை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் வார்டு எண் 86க்கு உட்பட்ட பகுதியில் பழுதாகி உள்ள ஆத்துப்பாலம் மின்மயானம் புகைபோக்கி கோபுரத்தை சீரமைக்கும் பணி நடக்க இருப்பதால் வரும் 11 ஆம் தேதி வரையில் மின்மயானம் தற்காலிகமாக மூடப்படுவதாக துணை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.86க்கு உட்பட்ட ஆத்துப்பாலம்‌ பகுதியில்‌ மின்மயானம்‌ அமைந்துள்ளது. இந்த ஆத்துப்பாலம்‌ மின்மயானத்தை Coimbatore Social Services Trust எனும் அறக்கட்டளை மூலம்‌ பராமரித்து வருகின்றனர்‌. கடந்த 26 ஆம் தேதியன்று ஆத்துப்பாலம்‌ மின்மயானத்தின்‌ புகைபோக்கி கோபுரமானது (Chimney) பழுதாகி சாய்ந்தது.

எனவே, மின்மயானத்தை பராமரித்து வரும்‌ Coimbatore Social Services Trust அறக்கட்டளையினர்‌ தாங்களே பழுதாகி உள்ள புகைபோக்கி கோபுரத்தை (Chimney) சீரமைத்து கொள்வதாக தெரிவித்தனர்‌. தற்போது, பழுதாகி உள்ள கோபுரத்தை (Chimney) சீரமைத்து, பராமரிப்பு பணிகள்‌ மேற்கொள்ளப்பட உள்ளதால்‌ கடந்த 27 ஆம் தேதி முதல்‌ 11.07.2022 வரை ஆத்துபாலம்‌ மின்மயானத்தை சீரமைக்கும்‌ பணியின்‌ அவசர அவசியம்‌ கருதி மின்மயானத்தை பராமரிப்பிற்காக தற்காலிகமாக மூடப்படுகிறது என துணை ஆணையாளர்‌ (பொ) மரு.மோ.ஷாமிளா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...