ஓய்வு பெறும் ஆசிரியர்களை மறுநியமனம் செய்யலாம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!

ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெற்றாலும், அவர்கள் பணிக்கு தேவைப்படும் பட்சத்தில் அந்த ஆண்டின் இறுதி வரை மறு நியமனம் வழங்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.



சென்னை: ஓய்வுபெறும் ஆசிரியர்கள் நிபந்தனையின் பேரில் மறுநியமனம் செய்ய அனுமதி அளித்து தமிழக கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை:-

பள்ளிக் கல்வி- மறுநியமனம் -அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் - கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டில் கடைசி வேலை நாள் வரை (Upto the end of Academic Session) தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் ஆணை வெளியிடப்படுகிறது.

1. அரசாணை (நிலை) எண் 249 பள்ளிக்கல்வித் துறை, நாள்.9.2.1959,

2. அரசாணை (நிலை) எண்.1643 பள்ளிக் கல்வித் துறை, நாள் 27.10.1988.

3. அரசாணை (நிலை) எண்.170 பள்ளிக் கல்வி பக5(2) துறை, நாள் 23.10.2014

4. அரசாணை நிலை எண்261, பள்ளிக்கல்வி பக5(2) துறை நாள் 20.12.2018,

5. பள்ளிக் கல்வி ஆணையரின் கடித ந.க.எண் 35593/சி2/இ2/2022, நாள் 27.06.2022

ஆணை:-

1. மேலே, முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், அரசு/அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட முன் நிபந்தனைகளின் அடிப்படையில் மறுநியமனம் வழங்குவதற்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

I)ஆசிரியர்களின் பண்பு மற்றும் நடத்தை திருப்திகரமாக இருத்தல் வேண்டும்.

II) தொடர்ந்து பணிபுரியும் வகையில் உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.

2. மேலே, இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மேற்கண்ட இரு நிபந்தனைகளுடன் பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளுக்கு ஓராண்டிற்கு முன்னர் ஆசிரியரின் ஓய்வூதிய கருத்துருக்கள் மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட வேண்டும் என்று கூடுதலாக, மூன்றாவது நிபந்தனை விதித்து ஆணை வெளியிடப்பட்டது.

3. மேலே, மூன்றாவதாக படிக்கப்பட்ட அரசாணையில், 2003-ஆம் ஆண்டு முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்ததை முன்னிட்டு 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு நியமனம் பெற்று பங்களிப்பு ஆசிரியர்களுக்கு பணியிலிருந்து ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரும் ஆசிரியர்களுக்கு ஓய்வு பெறும் நாளுக்கு ஓராண்டுக்கு முன்னர் ஓய்வூதிய கருத்துருக்கள் மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை பொருந்தாது என்பதால் அவர்களுக்கு அந்நிபந்தனையினை தளர்வு செய்து அவர்களுக்கு மறுநியமனம் அளிக்கும் போது ஓய்வு பெறுவதற்கு முன்னர் கடைசியாக பெற்ற ஊதியமே மறுநியமன காலத்திற்கு ஊதியமாக வழங்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

4. மேலே, நான்காவதாக படிக்கப்பட்ட அரசாணையில், அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் உபரி ஆசிரியர்களில் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு இறுதிவரை மறுநியமனம் அளிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

5.மேலே, ஐந்தாவதாக படிக்கப்பட்ட பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதத்தில் நடப்பு கல்வியாண்டு 2022-2023 முதல் அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வில் செல்ல அனுமதிக்கப்படின் கல்வியாண்டு முடியும் வரை அப்பணியிடம் பூர்த்தி செய்யப்படாத நிலையில், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலையினை தவிர்க்கவும் மாணவர்களின் கல்வி நலன் கருதியும் கற்பித்தல் பணி பாதிக்கக் கூடாது என்பதை கருதியும் கடந்த ஆண்டுகளைப் போலவே ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டின் இறுதி வரை மறு நியமன அடிப்படையில் பணி நீட்டிப்பு வழங்குவதற்கு அனுமதி அளித்து ஆணை வழங்குமாறு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

6.பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலித்தது. மாணவர்களின் கல்வி நலன் கருதி. கற்பித்தல் பணி பாதிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு. 2022/2023 ஆம் கல்வியாண்டு முதல் மேலே நான்காவதாக படிக்கப்பட்ட அரசாணையில் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை (Upto the end of Academic Session) தேவைப்படும் ஆசிரியர்களுக்கு மறுநியமனம் வழங்க அரசு அனுமதி அளித்து ஆணையிடுகிறது.

7. இவ்வாணை நிதித்துறையின் அ.சா.எண்.2475/FS/P/2022, நாள் 23.06.2022-இல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஆணையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...