பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்திட 5-ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிப்பு..!

இவ்வாறான கால அவகாசம் நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்க இயலாது எனவும், இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றிடுவீர் என மாவட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் மாவட்ட வருவாய் அலுவலர் க.இராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.


கோவை: பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்திட 5-ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை, பிறப்பு சான்றிதழில் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி, குழந்தை பிறந்த 21-நாட்களுக்குள் பிறப்பினை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு - இறப்பு பதிவு சட்டம், 1969-வழி வகை செய்கிறது.

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையாக சான்றிதழ் ஆகும். பிறப்பு சான்றிதழ் குழந்தை பள்ளியில் சேர - வாக்காளர் அடையாள அட்டை பெற வயது குறித்து ஆதாரம், ஓட்டுநர் உரிமம் பெற பாஸ்போர்ட் மற்றும் விசா பெற இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12-மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமும் இன்றி பெயர் பதிவு செய்திடலாம். 12-மாதங்களுக்கு பின் குழந்தையின் பெயரை பதினைந்து வருடங்களுக்குள் உரிய கால தாமத கட்டணம் செலுத்தி பதிவு செய்திடலாம்.

திருத்தி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள் 2000-ன் படி 1.1.2000-க்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு 31.12.2014 வரை பெயர் பதிவு செய்திட வழி வகை செய்யப்பட்டது. மேற்கண்ட கால அளவு முடிவுற்ற பின்னும் 5-ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 31.12.2019 வரை குழந்தையின் பெயர் பதிவு செய்திட அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அவ்வாறான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 31.12.2019 உடன் முடிவுற்ற நிலையில், பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்திட பொது மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அந்நாட்டு குடியுரிமை பெற மற்றும் மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற சிரமம் ஏற்பட்டது.

பொது மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை களைந்திட

•1.1.2000-க்கு முன் பெயரின்றி பிறப்பு பதிவு செய்யப்பட்ட பிறப்புகள்

•வகுத்துரைக்கப்பட்ட 15 ஆண்டு கால அவகாசம் முடிவற்ற அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் மேலும், 5-ஆண்டு கால அவகாசம் நீட்டித்து 31.12.2024 வரை பெயர் பதிவு செய்திட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஒரு முறை குழந்தையின் பெயரை பதிவு செய்த பின் எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாது. குழந்தையின் பெயரை இறுதியாக முடிவு செய்த பின் சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரை அணுகி உறுதிமொழி படிவம் அளித்து பதிவு செய்யலாம்.

இவ்வாறான கால அவகாசம் நீட்டிப்பு இனிவரும் காலங்களில் வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றிருவிர் என மாவட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் மாவட்ட வருவாய் அலுவலர் க.இராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...