கோவை ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் பதிவு செய்ய கடைசி தேதி அறிவிப்பு..!

விண்ணப்பத்தினை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் உரிய ஆவணங்களுடன் ஆனைகட்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



கோவை: ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (பழங்குடியினருக்கானது) பயிற்சியாளர் சேர்க்கைக்கு ONLINE மூலம் விண்ணப்பிக்கலாம்.

கோவை மாவட்டத்தில் ஆனைகட்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (பழங்குடியினருக்கானது) 2022-ம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் ஜூலை 20-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தினை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் எனவும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் உரிய ஆவணங்களுடன் ஆனைகட்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் சேர்வதற்கு கல்வி தகுதி எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், ஆண்களுக்கு வயது வரம்பு 14-முதல் 40-வயது வரை இருக்க வேண்டும் எனவும், மகளிருக்கு 14-வயது முதல் வயது வரம்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம் எனவும், அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வருகையின் அடிப்படையில் 750-ரூபாய் கல்வி உதவித்தொகை, NIMI பாட புத்தகங்கள் சீருடைகள் காலணிகள் மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழில் பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாய்ப்பு பெற்று வழங்கப்படும் எனவும், பயிற்சியாளர்களுக்கு இடவசதியை பொருத்து உணவு மற்றும் தங்கும் விடுதி இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு, 89408-37678, 94421-85780, 99651-03597, 94860-74384, 96009-79707 என்று தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...