பாரதியார் பல்கலைக்கழகத்தில் வாழ்க்கை வழிகாட்டும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி கனவு தலைப்பில் வாழ்க்கை வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


கோவை: கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கல்லூரி கனவு தலைப்பில் வாழ்க்கை வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாளை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு எனும் தலைப்பில் வாழ்க்கை வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தமிழக அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையும் பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து கோவை மாவட்டத்தில் 12ம் வகுப்பை தொடர்ந்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல்வேறு வாய்ப்புகள், கல்லூரிகளில் விவரங்கள், பாடங்கள், நுழைவுத் தேர்வுகள், வங்கிகளில் வழங்கப்படும் கல்வி கடன் பற்றிய விவரங்கள் மற்றும் ஊக்கத்தொகை பற்றிய விவரங்கள் குறித்து விவரிப்பதற்கு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 2021-22 ம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களில் அறிவியல் மற்றும் கலை பிரிவுகளில் இருந்து தலா 10 மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்து சுமார் 1000 மாணாக்கர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவ மாணவிகளை பள்ளிகளில் இருந்து அழைத்து வரவும் நிகழ்ச்சி முடிந்து அழைத்து செல்லவும் பொறுப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிட் 19 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...