மக்களே.. 'பூஸ்டர் டோஸ்' போடுங்க.. பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை..!

தமிழகத்தில் 17.96 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி போடாமல் உள்ளனர். அவர்களுக்கு தொற்று பாதிக்கப்பட்டால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் எச்சரித்துள்ளார்.


கோவை: தமிழகத்தில் 17.96 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் போடவில்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதைக் காட்டுகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முக்கியமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இது 'ஓமைக்ரான் பிஏ 5' வகை தொற்று வந்தாலும் தீவிர உடல்நல பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.

எனவே, முன்கள பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயது மேற்பட்டோர் கட்டாயம் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறினார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...