ஸ்மார்ட் சிட்டியின் ஸ்மார்ட் மக்கள் - கோவை ஸ்மார்ட் சிட்டி அன்றும் இன்றும் தலைப்பில் புகைப்பட போட்டி!

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ஸ்மார்ட் சிட்டியின் 7ம் ஆண்டு விழாவை முன்னிட்டு கோவை ஸ்மார்ட் சிட்டி அன்றும் இன்றும் என்ற தலைப்பில் புகைப்பட போட்டி நடைபெற இருக்கிறது.



கோவை: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் ஸ்மார்ட் சிட்டியின் 7ம் ஆண்டு விழாவை முன்னிட்டு கோவை ஸ்மார்ட் சிட்டி அன்றும் இன்றும் என்ற தலைப்பில் புகைப்பட போட்டி நடைபெற இருக்கிறது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள சிறுகுன்றா எஸ்டேட் தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பிளாஸ்டிக் மத்திய அரசின்‌ வீட்டுவசதி மற்றும்‌ நகாப்புற வளர்ச்சித்துறை சார்பில்‌ ஸ்மார்ட்‌ சிட்டியின்‌ ஏழாம்‌ ஆண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்வுகள்‌ நாடெங்கும்‌ நடைபெற்று வருகிறது. இதன்‌ ஒருபகுதியாக கோயம்புத்தூர்‌ ஸ்மாட்‌ சிட்டி சார்பில்‌ பள்ளி, கல்லூரி மாணவர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ என அனைவருக்கும்‌ பல்வேறு போட்டிகள்‌ நடத்தப்பட இருக்கின்றன.



“கோவை ஸ்மார்ட்‌ சிட்டி அன்றும்‌ இன்றும்”‌ என்ற தலைப்பில்‌ புகைப்பட போட்டி நடைபெறவுள்ளது. இதில்‌ கல்லூரி மாணவர்களும்‌, பொதுமக்களும்‌ கலந்து கொள்ளலாம்‌. தாங்கள்‌ எடுக்கும்‌ புகைப்படங்களை தங்கள்‌ முழு விவரங்களுடன்‌ http://bit.ly/3HPfkdl என்ற தளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யலாம்‌. கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து மேலாண்மை, நகர நிலப்பரப்பு மேலாண்மை ஆகிய தலைப்புகளின்‌ கீழ்‌ கோவை நகர மேம்பாட்டிற்கு உதவும் திட்டங்களை IDEATHON போட்டியில்‌ பகிரலாம்‌.



அனைத்து தரப்பு மக்களும்‌ தங்கள்‌ ஆலோசனைகளை http://bit.ly/30jpxBg என்ற தளத்தில்‌ PDF அல்லது அதிகபட்சம்‌ மூன்று நிமிட காணொலி வடிவில்‌ (Documentary Film) பதிவேற்றலாம்‌. இப்போட்டிகளுக்குரிய பதிவுகள்‌ வந்து சேர வேண்டிய கடைசி நாள்‌ 24.06.2022 மாலை 6.00 மணி. வெற்றியாளர்களுக்கு பல்வேறு பரிசுகள்‌ வழங்கப்படும்‌. இப்போட்டியின்‌ முடிவுகள்‌ 25.06.2022 அன்று அறிவிக்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...