ஸ்மார்ட் சிட்டியின் 7ம் ஆண்டு விழா: கோவை ஸ்மார்ட் சிட்டி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டி!

வீட்டுவசதி மற்றும்‌ நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில்‌ ஸ்மார்ட் சிட்டியின் 7ம் ஆண்டு விழாவையொட்டி கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.



கோவை: வீட்டுவசதி மற்றும்‌ நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில்‌ ஸ்மார்ட் சிட்டியின் 7ம் ஆண்டு விழாவையொட்டி கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.

மத்திய அரசின்‌ வீட்டுவசதி மற்றும்‌ நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில்‌ ஸ்மார்ட்‌ சிட்டியின்‌ ஏழாம்‌ ஆண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்வுகள்‌ நாடெங்கும்‌ நடைபெற்று வருகிறது.

இதன்‌ ஒருபகுதியாக கோயம்புத்தூர்‌ ஸ்மார்ட்‌ சிட்டி சார்பில்‌ பள்ளி, கல்லூரி மாணவர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ என அனைவருக்கும்‌ பல்வேறு போட்டிகள்‌ நடத்தப்பட இருக்கின்றன.



கோவை மாநகராட்சி பள்ளிகளில்‌ ஒன்பதாம்‌ வகுப்பு முதல்‌ பன்னிரண்டாம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு காலநிலை மாற்றம்‌, ஸ்மார்ட்‌ கோவை போன்ற தலைப்புகளில்‌ ஓவியப்‌ போட்டி, கட்டுரைப்‌ போட்டி மற்றும்‌ பேச்சுப்‌ போட்டி நடைபெறவுள்ளது. ஆறாம்‌ வகுப்பு முதல்‌ எட்டாம்‌ வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வினாடிவினா போட்டியும்‌ நடத்தப்படும்‌. வெற்றி பெறுபவர்களுக்கு பல்வேறு பரிசுகளும்‌ வழங்கப்பட உள்ளன. போட்டிகள்‌ குறித்து மேலும்‌ தகவல்களுக்கு கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ www.ccmc.gov.in என்ற இணையதளத்தில்‌ அறிந்து கொள்ளலாம்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...