கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வரும் 22-ம் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்!

தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வரும் 22 -ம் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடக்க இருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வரும் 22 -ம் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடக்க இருப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகர போலீஸ் சார்பில் வரும் வரும் 22-ம் தேதி முதல் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:பொதுமக்களிடம் இருந்து தினமும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை மனுக்கள் பெறுகிறோம். மிகவும் அவசர சூழ்நிலைகளில் மட்டுமே நேரம் கருதாமல் மனுக்கள் பெறுவோம். தற்போது தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி டிஜிபி உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் புதன்கிழமைகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரை பொதுமக்கள் இருந்து நேரடியாக மனுக்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு அறிவிப்பின் படி முதல் வாரம் வரும் 22-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள் பெறப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...