அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள்‌ அகற்றம்: உரிமையாளர்களுக்கு கோவை மாநகராட்சி எச்சரிக்கை..!

சம்பந்தப்பட்ட இரண்டு விளம்பரம்‌ வைத்த நிறுவனத்திடமிருந்து தலா ரூ.10,000/- வீதம்‌ ரூ.20,000/- அபராதமாக வசூலிக்க ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ உத்தரவிட்டதன்‌ அடிப்படையில்‌ அபராதத்‌ தொகை மாநகராட்சி அதிகாரிகள்‌ மூலம்‌ வசூல்‌ செய்யப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப்‌ பதாகைகள்‌ மாநகராட்சி ஊழியர்கள்‌ மூலம்‌ அகற்றப்பட்டது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, மேற்கு மண்டலம்‌, டி.பி.சாலையில்‌ நடைபாதை தளங்களில்‌ உள்ள தெருவிளக்கு கம்பங்களில்‌ மாநகராட்சி அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப்‌ பதாகைகள்‌ மாநகராட்சி ஊழியர்கள்‌ மூலம்‌ அகற்றப்பட்டது.

மேலும்,‌ சம்பந்தப்பட்ட இரண்டு விளம்பரம்‌ வைத்த நிறுவனத்திடமிருந்து தலா ரூ.10,000/- வீதம்‌ ரூ.20,000/- அபராதமாக வசூலிக்க ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ உத்தரவிட்டதன்‌ அடிப்படையில்‌ அபராதத்‌ தொகை மாநகராட்சி அதிகாரிகள்‌ மூலம்‌ வசூல்‌ செய்யப்பட்டது.

மேலும்‌, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ மாநகராட்சியின்‌ உரிய அனுமதியின்றி வைக்கப்படும்‌ விளம்பரப்‌ பதாகைகள்‌ அகற்றப்படுவதும்‌, உரிய அபராதம்‌ விதிக்கப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...