துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி - நாளை பில்லூர் குடிநீர் விநியோகம் தடைபடும்!

கோவையில் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை பில்லூர் குடிநீர் விநியோகம் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை பில்லூர் குடிநீர் விநியோகம் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் பில்லூர் குடிநீர் விநியோகம் நாளை தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு கூறியதாவது: மேட்டுப்பாளையம் கோட்டத்திற்கு உட்பட்ட மருதூர் துணை மின் நிலையம் மற்றும் பவானி பேரேஜ் II ஆகிய இரண்டு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை 14.06.2022 (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் பில்லூர் குடிநீர், வெள்ளியங்காடு குடிநீர், நெல்லித்துரை, தேக்கம்பட்டி, காரமடை - தேக்கம்பட்டி குடிநீர் இணைப்புகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். எனவே வார்டு பகுதி பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...