கோவையில் பள்ளி செல்லும் சிறார்களுக்கு பகுதி நேர கலை பயிற்சி வகுப்புகள்- மாவட்ட ஆட்சியர் தகவல்..!

இதில் பதிவு செய்ய மற்றும் மேலும் விவரங்கள் அறிவதற்கு கோயம்புத்தூர் ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை 97515-28188 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக அரசின் சார்பில் பள்ளி செல்லும் சிறார்களுக்கு பகுதி நேர கலைப் பயிற்சி வகுப்புகள் கோவையில் துவங்குவதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலம் பள்ளி செல்லும் மாணவ மாணவியர் கலை கல்லூரிகளில் பயிலும் வண்ணம் பகுதி நேர கலைப்பயிற்சி அளித்து வருகிறது. கோவையில் செட்டிபாளையம் சோலகம்பட்டி அரசு இசைக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது.

சட்டமன்றத்தில் குரலிசை(வாய்ப்பாட்டு), பரத நாட்டியம் ஓவியம் ஆகிய கலைகளில் சனிக்கிழமை மதியம் 3 மணி முதல் 5 மணி வரை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை பயிற்சி அளிக்கப்படுவதாகவும், 5 வயது முதல் 16 வயது வரை உள்ள சிறுவர் சிறுமியர் இதில் சேரலாம் எனவும், இதற்கு பயிற்சிக் கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் மன்ற உறுப்பினராக பதிவு செய்வதற்கு ஆண்டு சந்தா தொகை 300 ரூபாய் செலுத்தப்பட வேண்டும் எனவும் ஜூன் 18-ஆம் தேதி அன்று தொடங்கும் பயிற்சிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்றத்தில் உறுப்பினராக பயிற்சி பெறும் சிறார்கள் மாவட்ட மாநில தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம் செயல்முறை பயிலரங்கம் ஆகியவைகளில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 18 முதல் பயிற்சி வகுப்புகள் கோவை செட்டிபாளையம் சாலையில் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள இசை கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட உள்ளது எனவும், இதில் பதிவு செய்ய மற்றும் மேலும் விவரங்கள் அறிவதற்கு கோயம்புத்தூர் ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை 9751528188 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...