நீங்க இன்னும் தடுப்பூசி போடலையா? கோவையில் ஜூன் 12ம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம்..!

தடுப்பூசி போட்டுக்கொள்ள தவறியவர்கள்‌, அவர்கள்‌ வசிக்கும்‌ பகுதியிலுள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 7 மணி முதல்‌ மாலை 7 மணி வரை நடைபெறும் முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்‌.


கோவை: வரும் 12ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ ஞாயிற்றுக்கிழமை (12.06.2022) அன்று காலை 7 மணி முதல்‌ மாலை 7 மணி வரை நடைபெறும்‌ கோவிட் ‌19 மாபெரும்‌ தடுப்பூசி முகாம்களுக்கு வார்டு ஒன்றிற்கு 9 பூத்கள்‌ வீதம்‌ 900 பூத்கள்‌ மற்றும்‌ 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும்‌ சோத்து மொத்தம்‌ 50 மொபைல்‌ பூத்கள்‌ என மொத்தம்‌ 950 தேர்வு செய்யப்பட்டு கோவிட்‌ தடுப்பூசி போடுவதற்கு இடம்‌ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ இதுநாள்‌ வரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல்‌ தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில்‌ 100 சதவீதம்‌ மேல்‌ தாண்டியுள்ளனர்‌. இரண்டாம்‌ தவணை தடுப்பூசி இன்று 8 சதவீதம்‌ பேர்‌ போட வேண்டியவர்கள்‌ உள்ளனர்‌.

கோவின்‌ வலைத்தளத்தில்‌ இரண்டாம்‌ தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்களின்‌ பட்டியல்‌ தரவிறக்கம்‌ செய்து ஒவ்வொரு தனிநபருக்கும்‌ அலைப்பேசியின்‌ மூலமாக இரண்டாம்‌ தவணை தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்‌, 12 வயது முதல்‌ 14 வயது, 15 வயது முதல்‌ 18 வயதுடைய குழந்தைகளில்‌ முதல்‌ மற்றும்‌ இரண்டாம்‌ தவணை தடுப்பூசி போடவேண்டியவர்கள்‌ நாள்‌ 12.06.2022 நடைபெறும்‌ “மாபெரும்‌ கொரோனா தடுப்பூசி முகாம்களில்‌” சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்‌.

மேலும்‌, சுகாதாரப்‌ பணிகளில்‌ ஈடுபடும்‌ பணியாளர்கள்‌ உள்ளிட்ட முன்னிலை பணியாளர்கள்‌ மற்றும்‌ 60 வயதிற்கு மேற்பட்டவர்களில்‌ பூஸ்டர்‌ தடுப்பூசி போடாதவர்கள்‌ அனைவரும்‌ முகாம்களை அணுகி பூஸ்டா்‌ தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்‌.

இது தவிர தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தவறியவர்கள்‌, அவர்கள்‌ வசிக்கும்‌ பகுதியிலுள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்‌ கோவிட்‌ தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்‌. இதில்‌ பொது மக்கள்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ அனைவரும்‌ கலந்துகொண்டு கோவிட்‌ தடுப்பூசியை தவறாமல்‌ போட்டுக்கொண்டு பயனடைவதுடன்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சியை கோவிட்‌ தொற்று தடுப்பின்‌ முன்மாதிரி மாநகரமாக மாற்றிட மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ கேட்டுக்கொண்டனர்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...