கோவை மாவட்ட விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் - மாவட்ட ஆட்சியர் தகவல்!

கோவையில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் மற்றும் இதர கடன் பெற்று பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் மற்றும் இதர கடன் பெற்று பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வட்டியில்லா பயிர்க்கடன், வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன் ஆகியவற்றை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்ட விவசாயிகள் தங்களின் ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டை நகல், நிலவுடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பான கிராம நிர்வாக அலுவலர் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் மற்றும் இதர கடன் பெற்று பயனடையலாம் என்றும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் படிவம் பெற்று 100 ரூபாய் பங்கு தொகை மற்றும் 10 ரூபாய் நுழைவுக் கட்டணம் செலுத்தி கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினராக சேர்ந்து அனைத்து வகையான கடன்களும் பெற்று பயனடையலாம் என்றும் சங்கத்தின் உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் சில்லறை விற்பனை மூலம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கோவை மண்டல இணைப்பதிவாளர் 7338720301, கோவை சரக துணைப்பதிவாளர் 7338720303, பொள்ளாச்சி சரகர் துணைப் பதிவாளர் 7338720304 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...