கோவை மாநகர காவல் ஆணையாளர் உட்பட 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…!

தமிழகம் முழுவதும் 44 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், கோவை மாநகரில் மட்டும் காவல் ஆணையாளர் உட்பட 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் கோவை மாநகர காவல் ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 4 துணை ஆணையாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 44 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார் IPS, மத்திய அரசு பணிக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால், மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் IPS, கோவை மாநகர புதிய காவல் ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதே போல, கோவை மாநகர வடக்கு துணை ஆணையாளர் ஜெயச்சந்திரன் - சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் செந்தில்குமார் - சென்னை தலைமையிட துணை ஆணையாளராக மாற்றப்பட்டுள்ளார்.

கோவை மாநகர தலைமையிட துணை ஆணையாளராக இருந்த செல்வராஜ் - சென்னை காவலர் பயிற்சி பள்ளி முதல்வராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, கோவை தெற்கு மாநகர துணை ஆணையாளர் உமா, சென்னை ரயில்வே எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவுகள் துறை சார் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பணியிட மாற்றத்தில் கோவை மாநகரில் மட்டும் காவல் ஆணையாளர் உட்பட 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...