கோவை இளம் மழலையர் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படக்கூடாது: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை!

மழலையர் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் சுய நிதி/நிதி உதவி பெறும் பள்ளிகள் இளம் மழலையர் பள்ளிகள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் குழந்தைகளுக்கான மற்றும் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் படி தொடக்க/தொடர் அங்கீகாரம் இன்றி செயல்படக் கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அனுமதி பெற்று செயல்படும் பள்ளிகள் மூன்று மாதங்களுக்குள் ஆரம்ப அங்கீகாரம் பெறுதல் வேண்டும் என்றும், அவ்வாறு ஆரம்ப அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் துவங்க அனுமதி திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழலையர் மற்றும் இளம் மழலையர் பள்ளிகள் அனுமதி பெற்ற பின்னரே தொடங்கப்பட வேண்டும் எனவும் சட்டப்படி அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அலுவலர் சான்று பெறாமல் அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பு தவிர பிறர் பள்ளிகள் அமைப்பது தொடர்ந்து நடத்துவது கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கோவை மாவட்டத்தில் துவக்க அனுமதி மற்றும் தொடர் அங்கீகாரம் இன்றி செயல்படும் இளம் மழலையர் பள்ளிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்னர் பள்ளிகள் அங்கீகாரம் பெற்று உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...